வங்கக் கடலில் தென்கிழக்கு மற்றும் கிழக்கு மத்தியப் பகுதிகளை ஒருங்கிணைத்து நிலவும் வளிமண்டல சுழற்சியானது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக உருமாறும். இது மேலும் வலுவடைந்து மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து அக்டோபர் 22ஆம் தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும். பிறகு அது புயல் சின்னமாக மாறி வங்கக் கடலில் மத்திய – மேற்கு பகுதியில் நிலைகொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், புயலின் பாதை இதுவரை கணிக்கப்படவில்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறிய பிறகே புயல் குறித்து கணிக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ள வானிலை ஆய்வு மையம் தீபாவளி பண்டிகை நேரத்தில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.