தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்சன்ஸ் சார்பில் லெஜண்ட் சரவணன் தயாரித்து, நடித்திருக்கும் “தி லெஜண்ட்” திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு துபாயில் நடைபெற்றது. முன்னதாக தென்னிந்தியத் திரைத்துறையின் முன்னணி நடிகர்கள் பலர் கலந்து கொண்ட தி லெஜண்ட் திரைப்படத்தின் பிரமாண்டமான இசை வெளியீட்டு விழா அண்மையில், சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தின் மொசலோ மொசலு பாடல் மற்றும் வாடி வாசல் வீடியோ பாடல் சமூக வலை தளங்களில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் மொசலோ மொசலு பாடல் 14 மில்லியன் மற்றும் வாடிவாசல் பாடல் 18 மில்லியன் பார்வைகளையும் கடந்துள்ள நிலையில், முதல் படம் வெளிவருவதற்கு முன்பே தான் ஒரு லெஜண்ட் எனத் தடம் பதித்திருக்கிறார் லெஜண்ட் சரவணன் என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.