குஜராத் : பிரதமர் நரேந்திர மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பான்சும் இன்று அகமதாபாத்தில் தொடங்கும் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 4-வது டெஸ்ட் போட்டியை நேரில் காண உள்ளனர். இதற்காக, அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் விளையாட்டு வளாகத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தை குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் ஆய்வு செய்தார். இந்நிலையில், இந்திய- ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டியின் 4-வது மற்றும் கடைசி டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தை நேரில் காண அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்த்தில் இந்த போட்டியை பிரதமர் மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஆகியோர் இணைந்து போட்டியை தொடங்கி வைத்தனர். கடைசி டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்தியா கைப்பற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.