இந்தியா முழுவதும் கொரோனா நோய் தொற்று கடந்த சில தினங்களாகவே அதிகரித்து வந்த நிலையில் தற்போது சற்று குறையத்தொடங்கி உள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,084 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய எண்ணிக்கையான 8 ஆயிரத்து 582ஐ விட குறைவாகும். இதனைத்தொடர்ந்து நாடு முழுவதும் 47 ஆயிரத்து 995 பேர் கொரோனா நோய்க்கு மருத்துவமனைகளில் சிசிச்சைப் பெற்றுவருகின்றனர். இது நேற்றை விட 3 ஆயிரத்து 482 பேர் அதிகமாகும். இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 32 லட்சத்து 30 ஆயிரத்து 101 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து நேற்று 4 ஆயிரத்து 592 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 4 கோடியே 26 லட்சத்து 57 ஆயிரத்து 335ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 24 ஆயிரத்து 757ஆக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மும்பையில் மட்டும் 1,803 பேருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து 16 ஆயிரம் பேர் மும்பையில் கொரோனாவுக்கு சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.