பூந்தமல்லி நெடுஞ்சாலை கோயம்பேடு அருகே சரவணபவன் உணவகத்திற்கு சொந்தமான 7.5 கிரவுண்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை சில வருடங்களுக்கு முன்பு அரசு வங்கியில் அடகு வைத்து ரூ.25 கோடி கடன் வாங்கியதாகவும் ஆனால் இதுவரை அசல் மற்றும் வட்டி எதுவும் செலுத்தவில்லை எனவும் வங்கியின் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் வாங்கிய கடனை செலுத்தாததால் சரவணபவன் உணவகத்துக்கு சொந்தமான இடத்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டனர். இதற்கிடையில், வட்டி மற்றும் அசல் நிலுவை தொகையை திருப்பி செலுத்துமாறு வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் நில உரிமையாளர்களிடம் எடுத்துரைத்துள்ளனர். எனினும், நிலுவை தொகை செலுத்தாததால், இன்று பலத்த காவல்துறை பாதுகாப்புடன் வந்த வங்கி மற்றும் நீதிமன்ற ஊழியர்கள், நிலத்தை ஜப்தி செய்தனர். மேலும், காலி இடத்தை வைத்து கடன் பெற்ற உணவக நிர்வாகம், இடத்தை ஆட்கள் தங்குவதற்காக வாடகைக்கு விட்டிருந்தது தெரியவந்துள்ளது. அவர்களை வெளியேற்றிவிட்டு நீதிமன்ற ஊழியர்கள் காவல்துறை உதவியுடன் சீல் வைத்துள்ளனர்.