சென்னை : தொழிலாளர் தினம் இன்று கொண்டாப்படுவதை முன்னிட்டு சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் உள்ள மே தின நினைவு சின்னத்திற்கு சிவப்பு சட்டை அணிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் கூறியதாவது:- தொழிலாள தோழர்கள் அனைவருக்கும் மே நாள் நல்வாழ்த்துகள். தொழிலாளர்களை வாழ்த்தக் கூடிய அரசாக மட்டுமல்லாமல், அவர்களை வாழ வைக்ககூடிய அரசாகவும் திமுக அரசு செயல்பட்டு வருகிறது. திமுக அரசு கொண்டுவந்த 12 மணி நேர வேலை சட்டத்தை திமுக தொழிற்சங்கமே எதிர்த்ததை பாராட்டுகிறேன். மசோதா திரும்பப் பெறப்பட்டது பற்றி ஏம்.ஏல்,ஏக்களுக்கு செய்தி குறிப்பு வாயிலாக தெரிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.