தமிழில் பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியான ’காபி வித் டிடி’ போல, இந்தியில் இயக்குநர் கரண் ‘காபி வித் கரண்’ என்ற நிகழ்ச்சியின் 7ஆவது சீசன் நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் கலந்து கொண்டு கரணின் கேள்விகளுக்கு பதிலளிப்பார்கள், அந்த வரிசையில், இந்த முறை நடிகர் அக்ஷய் குமார் மற்றும் சமந்தா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சி வரும் நாட்களில் ஒளிபரப்பாகவுள்ள நிலையில் இதன் முன்னோட்டம் வெளியாகியுள்ளது. அதில், நிகழ்ச்சி அரங்குக்கு சமந்தாவை அக்ஷய் குமார் தன் கையில் தூக்கிய படி நுழைகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.