தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் உலக புகழ்பெற்ற குலசை தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இந்தாண்டு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் செப்பு கொடிமரத்தில் பட்டம் ஏற்றப்பட்ட கொடியேற்ற நிகழ்வில் பங்கேற்றனர். மேலும், இன்று தொடங்கும் விழாவின் இறுதி நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் அக்டோபர் 5ஆம் தேதி நள்ளிரவு குலசை கடற்கரையில் நடைபெறுகிறது.