பெங்களூரு : ஐ.பி.எல். தொடரில் நேற்றைய ஆட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. இந்த தொடரில் டாஸ் வென்ற பெங்களூரு அ ணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 200 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலி பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 54 ரன்னில் அவுட்டானார். இறுதியில், பெங்களூரு அணி 179 ரன்கள் மட்டும் எடுத்து தோற்றது. இதன்மூலம் 21 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா தனது வெற்றியைப் பதிவு செய்தது.