கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் 42 பேர், 5 ஆசிரியர்களுடன் நேற்று இரவு தனியார் பேருந்தில் உதகைக்கு சுற்றுலா செல்வதற்காக கிளம்பியுள்ளனர். தனியார் பேருந்து நேற்று இரவு சுமார் 11.30 மணியளவில் வடக்கஞ்சேரி மங்கலம் அருகே வந்த போது முன்னால் கோவையை நோக்கிச் சென்ற கேரள அரசு பேருந்தை முந்தி செல்ல முயன்றதாக தெரிகிறது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து முன்னால் சென்ற அரசு பேருந்து மீது மோதி சாலையில் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் தனியார் பள்ளி ஆசிரியர், மாணவர்கள் மற்றும் அரசு பேருந்து பயணிகள் என மொத்தம் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
தகவலறிந்து வந்த வடக்கஞ்சேரி காவல்துறையினர் தீயணைப்பு துறையினர் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டு படுகாயமடைந்த மற்ற மாணவர்கள் மற்றும் அரசு பேருந்து பயணிகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.