இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள நகை நிறுவனம் ஒன்று ஒரே மோதிரத்தில் 24 ஆயிரத்து 679 வைர கற்களை பதித்து மோதிரம் ஒன்றை உருவாக்கி சாதனை படைத்துள்ளது. காளான் வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மோதிரத்திற்கு அமி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த மோதிரம் 3டி பிரிண்டிங் மூலம் டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்டதாகவும், மோதிரத்தின் இதழ்களின் ஒவ்வொரு பக்கத்திலும் வைரங்கள் தனித்தனியாக கைகளால் வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 12 அவுன்ஸ் எடையுள்ள இந்த மோதிரத்தின் மதிப்பு 95 ஆயிரத்து 243 டாலர்கள் என கூறப்படுகிறது. இந்த சாதனை கின்னஸ் சாதனை புத்தக்கத்தில் இடம் பிடித்துள்ளது.