மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடகாவின் உயரிய விருதான “கர்நாடக ரத்னா” விருதை வழங்கவிருப்பதாக அந்த மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் உருவாக்கப்பட்ட நாளான நவம்பர் 1ஆம் தேதி புனித் ராஜ்குமாருக்கு இந்த விருதை வழங்கி கௌரவப்படுத்த உள்ளது கர்நாடக அரசு. கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகரான புனித் ராஜ் குமார் கடந்த ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரின் இழப்பு குடும்பத்தினர், திரை உலகினர் மட்டும் அல்லது மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இவர் பிரபல கன்னட திரைப்பட நடிகர் ராஜ் குமாரின் மகன் ஆவார்.