புதுச்சேரி: காரைக்கால்- இலங்கை யாழ்ப்பாணம் இடையே கப்பல் போக்குவரத்தை தொடங்க புதுவை அரசு முடிவு செய்தது. யாழ்ப்பாணம்-காரைக்கால் இடையே பயணிகள் மற்றும் சரக்கு கப்பல் போக்குவரத்துக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதாக இலங்கை மந்திரி டக்ளஸ் தேவானந்தாவும் தெரிவித்துள்ளார். இது நடைமுறை படுத்தப்பட்டால் காரைக்காலில் இருந்து 3 மணி நேரத்தில் இலங்கை சென்றடையலாம்.
இந்நிலையில், புதுச்சேரி அமைச்சர் லட்சுமி நாராயணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, காரைக்கால் – இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து விரைவில் தொடங்கும் என்றார். இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் காலதாமதம் ஏற்படுவதால் கப்பல் போக்குவரத்தை தொடங்குவதில் சற்று தாமதம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.