காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள தனியார் உதவிபெறும் மற்றும் தனியார் சுயநிதி பள்ளிகளை மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவாரஜ், கல்வி நிலைக்குழு தலைவர் இலக்கியா சுகுமார் முன்னிலையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பள்ளி கட்டிடத்தின் உறுதி தன்மை, மாணவர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை, பள்ளியில் சுகாதாரத்தரம் மற்றும் பராமரிப்பு உள்ளிடவை குறித்து ஆய்வு செய்தார். பள்ளிகளுக்கான அனுமதி மற்றும் பள்ளிகள் மாநகராட்சிக்கு உரிய வரி செலுத்தி வருகிறதா என்று சோதனை மேற்கொண்டார். இத்துடன், வகுப்பறைகள் சுத்தம், போதிய காற்றோட்ட வசதி, போதிய மேஜைகள் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டதோடு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் செல்லக்கூடிய பள்ளி வாகனங்களின் பயன்பாடு, விபத்து காலங்களில் பயன்படுத்தும் அவசர வழி உள்ளிட்டவைகளையும் ஆய்வு செய்தார். பின்னர், குறைபாடுகள் உள்ள பள்ளிகளுக்கு அவற்றை விரைந்து சரி செய்ய மேயர் அறிவுறுத்தினார்.