சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் சென்னையில் நடந்த இந்து முன்னணி அமைப்பின் நிகழ்ச்சி ஒன்றில் பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்பட்டது. இதையடுத்து, அவர் பேசிய வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. பின்னர், தந்தை பெரியாா் திராவிட கழகம் சார்பில் கனல் கண்ணனுக்கு எதிராக சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சைபா் குற்ற பிரிவு காவல்துறையினர் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கனல் கண்ணனை இன்று புதுச்சேரியில் கைது செய்துள்ளனர்.