நடிகர் கமல் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வெளிவந்து இருக்கும் திரைப்படம் ‘விக்ரம்’. ஏற்கனவே 1986ஆம் ஆண்டு விக்ரம் என்ற பெயரில் திரைப்படம் ஒன்றில் நடித்து அசத்திய கமல் இப்போது மீண்டும் அதே டைட்டிலில் மற்றுமொரு திரைப்படம் நடித்துள்ளார். இந்தநிலையில், இன்று காலை வெளியான விக்ரம் திரைப்படத்தின் முதல் நாள் முதல் ஷோவை பார்க்க ரசிகர்கள் பலர் முன்னதாகவே டிக்கெட்களை ரிசர்வ் செய்து இருந்தனர். இந்த டிக்கெட் முன்பதிவுக்கு ரசிகர் காட்டிய ஆர்வம் நடிகர் கமலே எதிர்பார்த்திராதது என்று சொல்லப்பட்டது. படத்தின் ப்ரோமோஜனுக்காக, ஆடியோ லாஞ்ச், ரயில் முழுவதும் டிக்கர் எனத் தொடங்கி வாட்டர் பாட்டில் வரை வேலை பார்த்திருந்தனர். இந்த நிலையில் இவ்வளவு எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு திரைப்படம் இருக்கிறதா என்ற கேள்விக்கு இல்லை என்ற ஒற்றை பதில் ஆம் என்றே சொல்ல வேண்டும். 2018ஆம் ஆண்டு விஸ்ரூபம் படத்தின் 2ஆம் பாகத்துக்கு பிறகு நடிகர் கமல் சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு நடித்து வெளியான திரைப்படம் என்பதால் திரையரங்குகளில் அவரின் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். 68 வயதாகும் கமல் இந்த திரைப்படத்தில் நடிப்பு, நடனம் மற்றும் சண்டை காட்சிகளில் நடித்ததின் மூலம் வயது என்பது எண் மட்டுமே என்று மீண்டும் ஒரு முறை இந்த உலகுக்கு எடுத்துக்கூறியுள்ளார். ஒரு ரசிகனாக இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிரூத் இசையமைத்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா, விஜய்சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் என பல ஹீரோக்கல் ஒரே திரைப்படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.