சென்னையில் ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தை எதிர்த்து ஓ.பன்னீா்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தொடா்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், அதிமுகவில் ஜூன் 23-ம் தேதிக்கு முன் இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்று உத்தவிட்டுள்ளார். இத்துடன், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் இணைந்து தான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும் நீதிபதி தன்னுடைய தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும், வழங்கப்பட்ட பதவிகளும், பதவி நீக்கல்களும் செல்லாத நிலை உருவாகியுள்ளது. இந்த தீர்ப்பையடுத்து, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அவரது இல்லம் முன்பாக பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.