வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளான பிரதிநிதிகள் சபை மற்றும் செனட்சபையின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று உரையாற்றினார். தனது உரையில் நாட்டின் பொருளாதாரம், சீனாவுடனான மோதல், ரஷியா-உக்ரைன் போர் உள்ளிட்ட விவகாரங்களை குறிப்பிட்டு ஜோ பைடன் பேசினார். அமெரிக்காவுக்குள் சீனா உளவு பலூனை அனுப்பியதையும், அந்த பலூனை ராணுவம் சுட்டு வீழ்த்தியதையும் சுட்டிக்காட்டி பேசிய ஜோ பைடன் “அமெரிக்க நலன்களை முன்னேற்றி உலகிற்கு நன்மை செய்யும் வகையில் சீனாவுடன் இணைந்து பணியாற்ற நான் உறுதிபூண்டுள்ளேன். அதே வேளையில் சீனாவால் நமது இறையாண்மைக்கு அச்சுறுத்தல் இருந்தால், நாட்டைப் பாதுகாக்க நாங்கள் எதையும் செய்வோம்” என தெரிவித்துள்ளார்.