அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமைச் சட்டத்தை ரத்து செய்து அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் சில தினங்களுக்கு முன்பு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து பெண்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிபர் ஜோ பைடனும், கருக்கலைப்பு உரிமை தடை சட்டத்து எதிராக “இது அமெரிக்காவுக்கு கருப்பு நாள், இந்த தீர்ப்பு ஜனநாயகத்தை 50 ஆண்டுகள் பின்னோக்கி தள்ளும்” என்று தனது அழுத்தமான கருத்தை அன்றைய தேதியில் வெளியிட்டிருந்தார். இதனையடுத்து, சொந்த ஜனநாயக கட்சி உறுப்பினர்களின் அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கும் நிர்வாக ஆணையில் அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கருக்கலைப்பு தடை அமலில் உள்ள மாகாணங்களில் நாடாளுமன்றம் மூலம் தடையை நீக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.