இந்தியாவில் 5ஜி சேவை டெல்லி, மும்பை, கொல்கத்தா, வாரணாசி ஆகிய நகரங்களில் முதற்கட்டமாக முன்னோட்ட அடிப்படையில் இன்று முதல் வழங்கப்படுவதாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. 5ஜி அலைக்கற்றை இணைய சேவையை சோதனை அடிப்படையில் பயனர்கள் பயன்படுத்தி, அவர்களிடமிருந்து கருத்துக்களைப் பெறுவதற்காக முன்னோட்ட அடிப்படையிலான சேவை வழங்கப்படுகிறது என்று ஜியோ தெரிவித்துள்ளது. மேலும், மக்கள் அளிக்கும் கருத்துக்களின் அடிப்படையில், சேவைகள் மேம்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.