இந்தியாவில் 5ஆவது தலைமுறை தகவல் தொடா்பு தொழில்நுட்பமான 5ஜி-யை அறிமுகப்படுத்த ஜியோ ஆயத்தமாகி வரும் நிலையில், 5ஜி தகவல் தொடா்பு கட்டமைப்பை ஏற்படுத்துவதற்காக முன்னணி ஐரோப்பிய தகவல் தொழில்நுட்ப சாதன தயாரிப்பாளா்களான ஸ்வீடனைச் சோ்ந்த எரிக்சன், ஃபின்லாந்தைச் சோ்ந்த நோக்கியா ஆகிய நிறுவனங்களுடன் இந்தியாவின் தொலைத்தொடா்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், ஒப்பந்தம் தொடர்பான விவரங்களான மதிப்பு உள்ளிட்டவை சரிவர தெரியவரவில்லை.