ராஞ்சி : தமிழ்நாடு பாஜக மூத்த தலைவராக செயல்பட்டு வந்தவர் சிபி ராதாகிருஷ்ணனை ஜார்க்கண்ட்டின் புதிய கவர்னராக ஜனாதிபதி கடந்த 12-ம் தேதி நியமித்து உத்தரவிட்டார்.இதனால், பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கடந்த 15-ம் தேதி சிபி ராதாகிருஷ்ணன் ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், ஜார்க்கண்டின் புதிய கவர்னராக சிபி ராதாகிருஷ்ணன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். ஜார்க்கண்ட்டின் 11வது கவர்னராக சிபி ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு ஜார்க்கண்ட் ஐகோர்ட்டு பொறுப்பு நீதிபதி பதவி பிரமானம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் முதல்-மந்திரி ஹெமந்த் சோரன், அமைச்சரவை மந்திரிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உடன் இருந்தனர்.