நடிகர் ஜெயம் ரவிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் ஜெயம்ரவி, மாலை எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி, நான் உடனடியாக என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தேவைப்பட்டால் பரிசோதனை செய்துகொள்ள கேட்டுக்கொள்கிறேன். முகக்கவசம் அணியுங்கள். பாதுகாப்பாக இருங்கள். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்’ என்று அவர் பதிவிட்டுள்ளார். மேலும், பொன்னியின் செல்வம் திரைபடம் தொடர்பாக அண்மை காலமாக தொடர்ந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த ஜெயம் ரவி, தன்னுடன் அண்மையில் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்திக்கொள்ளவும் கேட்டுக்கொண்டுள்ளார். அதேபோல், பாலிவுட் நடிகர் சல்மான் கான்னுக்கு டெங்கு காய்ச்சல் உறுதியாகியுள்ளது. இதனால், அவர் இந்தியில் தற்போது தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை இயக்குநரும் தொகுப்பாளருமான கரன் ஜோஹர் தொகுத்து வழங்கவுள்ளார்.