இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் இடம்பெற்றிருந்த பும்ரா, இரண்டு டி20 ஆட்டத்தில் காயம் காரணாமாக இடம்பெறவில்லை. இதைத்தொடர்ந்து ஜஸ்பிரித் பும்ரா உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இருந்தும் விலகப்பட்டதாக கடந்த சில தினங்களுக்கு முன் தகவல் பரவத்தொடங்கின. இதையடுத்து, தற்போது இந்த தகவலை உறுதி செய்யும் விதமாக பிசிசிஐ மருத்துவக் குழு ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை அணியில் இருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை நீக்குவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.