இங்கிலாந்து, இலங்கையைத் தொடர்ந்து இத்தாலி நாட்டின் பிரதமர் டிராகி பதவி விலகியுள்ளார். இதுத்தொடர்பான கடிதத்தை அந்தநாட்டின் அதிபரிடம் அவர் ஒப்படைத்துள்ளார். முன்னதாக, இத்தாலி நாடாளுமன்றத்தில் ஆளும் கூட்டணி கட்சி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில், ஆளும் கூட்டணியில் உள்ள அதிக எம்.பி.,க்களை கொண்ட பெரிய கட்சிகளில் ஒன்றான Five Star Movement கட்சி கலந்து கொள்ளவில்லை. இதனால், ஆளும் கூட்டணி கட்சி ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் பிரதமர் டிராகி. ஆனால், பிரதமரின் ராஜினாமாவை நிராகரித்துள்ளதாக அதிபர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.