தோல் பொருட்கள் தயாரிப்பு மற்றும் தோல் பொருட்கள் ஏற்றுமதி நிறுவனமான கே.எச். குரூப். இந்த நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில், சென்னை, வேலூர், பாண்டிச்சேரி உள்ளிட்ட 60 இடங்களில் கே.எச். குரூப் நிறுவனத்துக்கு சொந்தமான மற்றும் தொடர்புடைய இடங்களில் வருமானத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை மூன்றாவது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது.