சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது இந்தியாவின் மிகப்பெரிய தோல் பொருட்கள் தயாரிப்பு மற்றும் தோல் பொருட்கள் ஏற்றுமதி நிறுவனமான கே.எச். குரூப். இந்த நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுப்பட்டுள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில், சென்னை, வேலூர், பாண்டிச்சேரி உள்ளிட்ட 60 இடங்களில் கே.எச். குரூப் நிறுவனத்துக்கு சொந்தமான மற்றும் தொடர்புடைய இடங்களில் வருமானத்துறை அதிகாரிகள் நேற்று காலை சோதனையை தொடங்கினர். இந்த நிலையில் இன்றும் 2ஆவது நாளாக வருமான வரித்துறை சோதனை தொடர்கிறது.