தமிழகத்தை சேர்ந்த எம்.ஜி.எம். குழுமம் சென்னை, பெங்களூரு போன்ற முன்னணி நகரங்களில் ஏற்றுமதி இறக்குமதி, மதுபான தயாரிப்பு, மருத்துவமனைகள், நட்சத்திர விடுதிகள், வெளிநாட்டு வர்த்தகம், பொழுதுப்போக்கு பூங்கா உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காலை முதல் தமிழகம், பெங்களூரு உட்பட எம்.ஜி.எம். குழுமத்துக்குச் சொந்தமான 40 இடங்களில் வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் சென்னை, நெல்லை, செங்கல்பட்டு மாவட்டம் முட்டுக்காடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினரின் சோதனை நடைபெற்று வருகிறது.