டெல் அவிவ் : இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இவர் சமீபத்தில் நீதித்துறை மறுசீரமைப்பு மசோதாவை அறிமுகப்படுத்தினார். இந்த மசோதா நீதித்துறையின் அதிகாரத்தை குறைத்து நாடாளுமன்றத்துக்கு அதிக அதிகாரம் அளிக்க வகைசெய்கிறது. இதனால் இந்த மசோதாவுக்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியது. தொடர்ந்து பல வாரங்களாக லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இஸ்ரேல் ராணுவ மந்திரி யோவ் கேலண்ட் செய்தியாளர்களிடம் பேசுகையில், நீத்துறை மசோதாவை கைவிடும்படி இஸ்ரேல் அரசை வலியுத்தினார். இதனையடுத்து ராணுவ மந்திரி யோவ் கேலண்டை பதவி நீக்கம் செய்து பிரதமர் பெஞ்சமின் நேட்டன் யாகு அதிரடி நடவடிக்கை எடுத்தார். இந்த நிலையில் பொதுமக்களின் தொடர் போராட்டத்தால் நீதித்துறையை மாற்றியமைக்கும் மசோதா நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை பிரதமர் பென்ஜமின் நேதன்யாகு அறிவித்துள்ளார். பிரதமரின் அறிவிப்பை ஏற்று, போராட்டங்களை கைவிடுவதாக போராட்டக்குழுவினர் அறிவித்துள்ளனர்.