நியூடெல்லி டெலிவிஷன் என்று அழைக்கப்படும் என்டிடிவி நிறுவனம் கடந்த 30 ஆண்டுகளாக செய்தி ஊடகத்தில் இயங்கி வருகிறது. இந்த நிலையில், நேற்று மாலை என்டிடிவி நிறுவனத்தின் பங்குதார நிறுவனங்களில் ஒன்றான ப்ரோமோட்டர் RRPRH நிறுவனம் தன்னுடைய 29.18 சதவிகித பங்குகளை விற்பனை செய்ய இருப்பதாக அறிவித்தது. இதையடுத்து, அதனை அதானி குழுமத்தின் கிளை நிறுவனமான விஸ்வபிரதான் கமர்ஷியல் பிரைவேட் லிமிடெட் VCPL வாங்க இருப்பதாக விருப்பம் அறிவித்துள்ளது. ஏற்கனவே அதானி குழுமம் பல்வேறு தொழில்களை செய்துவரும் நிலையில் அண்மையில் 5ஜி ஏலத்திலும் பங்கேற்றது. தற்போது செய்தி ஊடகத்தையும் வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.