நடிகர்கள் பார்த்திபன், பிரிகிடா, பிரியங்கா ரூத், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் அண்மையில் வெளியான படம் இரவின் நிழல். Nonlinear single shot-ஆக எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தை சினிமா பிரபலங்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் பலர் பார்த்து பாராட்டியுள்ளனர். தொழில்நுட்பத் திறன், திரைப்படத்தின் பாணி என பலராலும் புகழப்பட்ட இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றது. இந்த நிலையில், இரவின் நிழல் திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது என்பதை நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் ”அமேசானில் இன்றோ நாளையோ ‘இரவின் நிழல்’ வந்தே விடும் ! அதை வரவேற்க நீங்களும், அறிவிக்க நானும் ஆவலுடன் … இருக்கிறோம். பார்ப்போம்! நீங்கள் காட்டும் ஆர்வத்திற்கு நன்றி!!!” என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.