தெஹ்ரான்: ஈரானைச் சேர்ந்த இளம் செஸ் வீராங்கனையான சாரா காதிப் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் கடந்த ஆண்டு கஜகஸ்தானில் நடந்த பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஹிஜாப் அணியாமல் கலந்துகொண்டார். ஹிஜாப் அணியாமல் சாரா விளையாட்டில் பங்கேற்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இந்த நிகழ்வு அவருக்கு பல்வேறு எதிர்வினைகளை உருவாக்கி இருக்கிறது. இதன் காரணமாக அவர் ஈரான் திரும்ப வேண்டாம் என்று அவரது உறவினர்களும், நண்பர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சாராவின் பெற்றோர்களும், உறவினர்களும் ஈரான் அதிகாரிகளால் மிரட்டப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில், மிரட்டலுக்கு அஞ்சி சாரா தற்போது ஸ்பெயினில் தஞ்சம் புகுந்து இருப்பதாக கூறப்படுகிறது.