நியூசிலாந்து நாட்டின் முன்னணி கிரிக்கெட் விளையாட்டு வீரர் ராஸ் டெய்லர். இவர், இந்தியாவின் டி20 லீக் 20 ஓவர் கிரிக்கெட் விளையாட்டு போட்டி அணிகளில் ஒன்றான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றிந்தார். அண்மையில் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வுப்பெற்ற இவர், தனது கிரிக்கெட் அனுபவங்கள் குறித்து புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், 2011ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல்., டி20 லீக் 20 ஓவர் கிரிக்கெட் விளையாட்டு போட்டித் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டக் அவுட் ஆனதற்காக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர் ஒருவர் தனது கன்னத்தில் அறைந்ததாக குறிப்பிட்டுள்ளார். அப்போது, இதற்காகவா கோடிகளில் சம்பளம் பெறுகிறாய் என்று கூறி 3-4 முறை அறைந்ததாக டெய்லர் தனது புத்தக்கத்தில் எழுதியுள்ளார். டெய்லர் எழுதிய இந்த தகவல் தற்போது பேசுபொருளாகியுள்ளது.