கவுகாத்தி : ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 8வது லீக் ஆட்டம் கவுகாத்தியில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதினர். இப்போட்டியில் தாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய பிரப்சிம்ரன் சிங், கேப்டன் ஷிகர் தவான் இருவரும் அபாரமாக ஆடி வலுவான அடித்தளம் அமைத்தனர். இந்த ஜோடி 90 ரன் சேர்த்த நிலையில் பிரிந்தது. பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. இதில், அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. இதன்மூலம் பஞ்சாப் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.