மும்பை : 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் , இன்று (சனிக்கிழமை) இரண்டு சுற்று ஆட்டங்கள் நடபெறுகின்றது. இதில் இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் அரங்கேறும் 12-வது லீக்கில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும், மும்பை இந்தியன்சும் கோதாவில் மோதுகின்றனர்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை-மும்பை இவ்விரு அணிகளும் இதுவரை 34 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 20-ல் மும்பையும், 14-ல் சென்னையும் வெற்றி கண்டன. ஐ.பி.எல். வரலாற்றில் சென்னைஅணி மும்பைக்கு எதிராகத் தான் அதிகமாக தோற்றிருப்பது கவனிக்கத்தக்கது. இதே போல் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மும்பைக்கு எதிராக 10 ஆட்டங்களில் ஆடியுள்ள சென்னை அணி அதில் 3-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இவ்விரு ஆட்டங்களையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ சினிமாவில் ரசிகர்கள் நேரடியாக காணலாம்.