சென்னை: புதிய கல்விக்கொள்கை அடிப்படையில் சிபிஎஸ்இ பள்ளிகளில் புதிய பாடத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் ‘5 ஆண்டு கட்டமைப்பு’ என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் 3 முதல் 8 வயது வரையிலான குழந்தைகளுக்கு நர்சரி வகுப்பு முதல் 2-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன.
மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த இந்த புதியமாற்றங்கள் செய்யப்பட்டுள்ள தாக சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது. இந்த புதிய பாடத்திட்டத்துக்கு தயாராகுமாறு சிபிஎஸ்இ ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.