சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் விளையாட்டு அரங்கில் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி இன்று முதல் வரும் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடரை தமிழ்நாடு அரசும், WTA-ம் இணைந்து நடத்துகிறது. இந்த போட்டிகளில் ஒற்றையர் பிரிவில் 32 வீராங்கனைகளும் இரட்டையர் பிரிவில் 32 வீராங்கனைகளும் மோதவுள்ளனர். இதில் 2 தமிழ்நாட்டு வீரர்கள் உட்பட 5 இந்திய வீரர்கள் பங்கேற்றனர். இந்த தொடரில் வெற்றி பெறும் வீராங்கனைகளுக்கு 2 கோடி ரூபாய் பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.