ரிசர்வ் வங்கி அதன் தொழில்நுட்பக் கட்டமைப்பை மேம்படுத்தி வருகிற நிலையில், தரவுகளை பகுப்பாய்வு செய்வதற்கு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம், மெஷின் லேர்னிங் உள்ளிட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.இந்த சேவையை வழங்க விரும்பும் நிறுவனங்கள் விண்ணப்பம் அனுப்பலாம் என்று கடந்த செப்டம்பர் மாதம் ரிசர்வ் வங்கி அறிவித்தது. பல நிறுவனங்கள் விண்ணப்பித்தாகத் தெரிகிறது. இந்நிலையில், அவற்றிலிருந்து 7 நிறுவனங்களை ரிசர்வ் வங்கி தேர்ந்தெடுத்துள்ளது.
அக்சென்ச்சர் சொல்யூஷன்ஸ், பாஸ்டன் கன்சல்டிங் குரூப், டெலாய்ட், எர்ன்ஸ்ட் அண்ட் யங், கேபிஎம்ஜி அஷ்யூரன்ஸ் மற்றும் கன்சல்டிங் சர்வீசஸ், மெக்கின்சி மற்றும் பிரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் ஆகிய 7 நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.இந்த நிறுவனங்கள் தங்கள் பரிந்துரைகளை ரிசர்வ் வங்கியிடம் முன்வைக்கும். அதன் அடிப்படையில், எந்த நிறுவனத்தை பணியமர்த்தலாம் என்பதை ரிசர்வ் வங்கி இறுதி செய்யும்.