புதுடெல்லி : பேரிடர்களை தாங்கும் உள்கட்டமைப்பு குறித்த மாநாட்டில் காணொலி மூலமாக பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: பேரிடர்களை தாங்கும் உள்கட்டமைப்புக்கான கூட்டணியில் இன்னும் சில ஆண்டுகளில் 40 நாடுகள் இணைய உள்ளன. இந்த மாநாடு, வளர்ந்த மற்றும் வளரும் பொருளாதாரங்கள், சிறிய மற்றும் பெரிய நாடுகள், வட மற்றும் தென் துருவங்கள் ஒரே தளத்தில் வருவதற்கான வாய்ப்பை இந்த மாநாடு ஏற்படுத்தி கொடுக்கிறது.
போக்குவரத்து உள்கட்டமைப்பில், சமூக மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு மிக முக்கியம். ஐரோப்பா மற்றும் இந்தியாவில் ஏற்பட்ட சூரிய அலை, சூறாவளி மற்றும் துருக்கி, சிரியாவில் பூகம்பம் உள்ளிட்ட சமீபத்தில் ஏற்பட்ட பேரழிவுகள், உலகம் ஏற்பட்ட சவால்களை எடுத்து காட்டுகிறது என்று கூறியுள்ளார்.