இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி ஐந்து டி20 போட்டிகளில் விளையாட திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி, இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான இரண்டு டி20 போட்டிகள் முடிந்த நிலையில், மூன்றாவது, டி20 போட்டி நேற்று இரவு 7 மணிக்கு விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ்.ஆர். சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நடைப்பெற்றது. முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனைத்தொடந்து களம் இறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடத்தொடங்கிய தென்னாப்பிக்க அணி 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 131 ரன்களை மட்டுமே பெற்றது. இதனால், 48 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி அபார வெற்றியை பதிவு செய்தது. முன்னதாக நடந்து முடிந்த முதல் 2 டி20 போட்டிகளில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்துவதின் மூலமே இந்தத்தொடரை கைப்பற்ற முயற்சிக்க முடியும் என்பதால் இந்திய அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றியுள்ளது.