இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில், இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டி20 போட்டி, டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெற இருக்கிறது. தொடர் போட்டிகளில் பங்கேற்றதன் காரணமாக இந்திய வீரர்கள் ரோகித் ஷர்மா, விராத் கோலி, பும்ரா, முகமது ஷமி ஆகிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தியா, தென்னாப்பிரிக்கா டி20 தொடரின் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டு இருந்தார். ஆனால், தற்போது அவருக்கு பயிற்சியின்போது ஏற்பட்ட காயம் காரணமாக கே.எல்.ராகுல் இந்தத்தொடரில் இருந்து விலகுகிறார். இதுதொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கே.எல்.ராகுல்,குல்தீப் யாதவ் ஆகியோர் காயம் காரணமாக இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான டி20 போட்டி தொடரில் விளையாட முடியாத நிலை உருவாகியுள்ளது. எனவே, அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இந்த தொடருக்கான கேப்டனாகவும், ஹர்திக் பாண்ட்யாவுக்கு துணை கேப்டன் பொறுப்பும் கொடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இந்திய அணியின் மூத்த வீரர்களுக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், ஐபிஎல் டி20 தொடரில் சிறப்பாக விளையாடிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இந்தியா, தென்னாப்பிரிக்கா தொடர் மீது மிகுந்த எதிர்ப்பார்ப்பும் கவனமும் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Lights, camera & action! 📸 📸
Some Behind The Scenes fun from #TeamIndia's headshots shoot! 😎 👌#INDvSA | @Paytm pic.twitter.com/Vq9H9G19Qa
— BCCI (@BCCI) June 9, 2022