ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 57 கிலோ உடல் எடைபிரிவின் இறுதிஆட்டத்தில் இந்திய இளம் வீரர் அமன் ஷெராவத், கிர்கிஸ்தானின் அல்மாஸ் ஸ்மன்பெகோவை எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த மோதலில் அமன் ஷெராவத் 9-4 என்ற புள்ளி கணக்கில் அல்மாஸ்சை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை பெற்றுள்ளார் . நடப்பு ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா வென்றுள்ள முதல் தங்கப்பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.