இங்கிலாந்து சென்றுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக விளையாடிய, இரண்டு போட்டிகளிலும் தலா ஒரு வெற்றியை இரு அணிகளும் பெற்றிருந்தன. இந்த நிலையில், இந்தியா, இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டி20 மகளிர் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 123 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கி விளையாடிய இங்கிலாந்து அணி, 18.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து, 126 ரன்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. இதன்மூலம், 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து மகளிர் அணி, 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.