சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் விளையாட்டு அரங்கில் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி கடந்த 12ஆம் தேதி தொடங்கி 8ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசும், WTA-ம் இணைந்து நடத்தும் இந்த சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில், இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா, ஜெர்மனியை சேர்ந்த தட்ஜினா மரியாவை எதிர்கொண்டார். அப்போது, சிறப்பாக விளையாடிய மரியா 6-0, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று தொடக்க ஆட்டத்திலேயே அங்கிதா ரெய்னாவை தொடரில் இருந்து வெளியேற்றியுள்ளார்.