FIH உலக கோப்பை மகளிர் ஹாக்கி போட்டி 2022 ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. அதன்படி ஸ்பெயின் நாட்டின் டெர்ராசா நகரில் நடைபெற்ற போட்டியில், இந்திய அணி கனடா அணியை வீழ்த்தி இந்தத்தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் சவிதா புனியா தனது சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தினார். 3-2 என்ற புள்ளி கணக்கில் இந்த வெற்றியை இந்தியா தனதாக்கியுள்ளது.