மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் 66க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்புக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நஞ்சுத் தன்மை கொண்ட தரமற்ற 4 இருமல் சிரப்கள்தான் காரணமா என்று உலக சுகாதார அமைப்பு விசாரித்து வருகிறது. ஹரியானா மாநிலம் சோனிபட்டை சேர்ந்த மெய்டென் மருந்தியல் நிறுவனம் தயாரித்த அந்த மருந்துகள் நச்சு மற்றும் இறப்புக்கு காரணமான ரசாயனங்களைக் கொண்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. அவை, புரோமெத்தசைன் வாய்வழி மருந்து, கோஃபெக்ஸ்மாலின் பேபி இருமல் சிரப், மகாஃப் பேபி இருமல் சிரப், மேக்ரிப் என் இருமல் சிரப் ஆகிய மெய்டென் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட நான்கு மருந்துகளும் அடங்கும் என உலக சுகாதார அமைப்பு மருந்து பொருள்கள் எச்சரிக்கை பிரிவு தெரிவித்துள்ளது.