அமெரிக்காவில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் 2022 நடைபெற்று வருகிறது. இதில், மகளிருக்கான ஈட்டி எறிதல் தகுதிச் சுற்று போட்டியில் இந்தியாவின் அன்னு ராணி பங்கேற்று தன்னுடைய முதல் வாய்ப்பில் தவறவிட்டார். எனினும், அடுத்த 55.35 மீட்டர் தூரம் ஈட்டியை வீசினார். மூன்றாவது சுற்றில் 59.60 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து 8வது இடத்தை பிடித்தார். முதல் 8 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார்கள் என்பதால் அன்னு ராணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம் 2வது முறையாக உலக தடகள சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு அன்னு ராணி சென்றுள்ளார். இந்த போட்டியில் இந்திய வீரர்கள் அவினாஷ் சேபிள், முரளி ஸ்ரீசங்கர் ஆகியோருடன் தற்போது அன்னு ராணியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.