இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி ஐந்து டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில், இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான இரண்டாவது டி20 போட்டி, ஒரிசா மாநிலத்தில் உள்ள பாராபதி மைதானத்தில் நடைபெற்றது. முதலில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால், முதலில் களத்தில் இறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில், 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. இதன் தொடர்ச்சியாக 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாட்டை தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 18.2 ஓவரில் 149 ரன்கள் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் இரண்டாவது வெற்றியை தென்னாப்பிரிக்கா அணி பெற்றுள்ளது.