8ஆவது டி20 உலக்கோப்பை கிரிக்கெட் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி முடிவடைந்த பிறகு இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஒரு நாள் போட்டியின் கேப்டனாக ஷிகர் தவானும், டி20 போட்டியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ரோகித், விராட், கே.எல்.ராகுலுக்கு இந்த போட்டிகளில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, வங்கதேசம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி மூன்று ஒரு நாள், இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளது. இந்த நிலையில், நியூசிலாந்து மற்றும் வங்கதேசத்துக்கு எதிரான போட்டிகளில் விளையாடவுள்ள இந்திய அணியினரின் பெயர்கள் வெளியிடப்பட்டது. அதில், அணியில் தேர்வாக இந்திய வீரர்களான பிருத்வி ஷா, நிதிஷ் ராணா, பிஸ்னோய் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் இன்ஸ்டாகிராமில் தங்களுடைய வருத்தத்தையும் மனநிலையையும் மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார்கள். ஏற்கனவே பல வீரர்கள் அணியில் இடம்பெறாததால் சர்ச்சை எழுந்துள்ளது. இந்த நிலையில், தங்களுடைய உணர்வுகளை வீரர்கள் இணையத்தில் பகிர்ந்திருப்பது கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் நிபுணர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.