இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த நிலையில் முதல் டி20 போட்டி நாளை திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ளது. இதைத்தொடர்ந்து, 2ஆவது டி20 போட்டி அக்டோபர் 2ஆம் தேதி அஸ்ஸாம் மாநிலத்தின் கவுகாத்தியிலும், 3ஆவது டி20 போட்டி அக்டோபர் 4ஆம் தேதி மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூரிலும் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. இதற்காக, தென் ஆப்பிரிக்கா அணி ஏற்கனவே திருவனந்தபுரம் வந்தடைந்த நிலையில் இந்திய அணி இன்று திருவனந்தபுரம் சென்றுள்ளது.